பறக்கும் கழுகுகள் விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

பறக்கும் கழுகுகள் விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் வருகின்ற 15:01:2019 தைப்பொங்கல் அன்று மாலை 4:30மணியளவில் கணேசா சனசமூக நிலையத்தில் இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்..

Read More

புன்னாலைக்கட்டுவன் வடக்கில் வீதி விளக்குகள்

அண்மைக்காலமாக புன்னாலைக்கட்டுவன் பிரதேசங்களில் நடைபெற்ற திருட்டு, வழிப்பறி சம்பவங்களையடுத்து மக்களின் பாதுகாப்புக்கருதி ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலையச் செயலாளரும் கிராம அபிருத்திச்சங்கத் தலைவருமான சமூக ஆர்வலர் இரத்தினசிங்கம் கெங்காதரன்(J.P ), நிலையத் தலைவர் இராசரத்தினம் விஷ்ணுரஞ்சன் ஆகியோரின் அயராத முயற்சியில் புன்னாலைக்கட்டுவன் வடக்கில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. “உதவும் உள்ளங்கள்” அமைப்பின் சுவிஸ் கிளை இணைப்பாளர் சமுக ஆர்வலர் அருள் பத்மநாதனின் தாயாரின் நினைவு நாளான 2018.10.07 அன்று அவரது நிதி உதவியுடன் இவ் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுவருவதாக எமது ஈவினை செய்தியாளர் – ஹரி தெரிவிக்கின்றார்

Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து, எமது ஊரின் பெயரை சிறப்பித்த மாணவச் செல்வங்களுக்கு, எதிர்காலத்திலும் நீங்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சிறந்து விளங்க எமது சங்கத்தின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் க.தாரணி 185 தி. ஹரிப்ரியன் 182 கி. லேஜிகன் 175 பி.கௌடில்யன் 173 வி. சர்மியா 172 சஞ்சீவன் 165

Read More

நவராத்திரி விழா 1ம் நாள்

Tharsanan Parameswaran அவர்கள் வெற்றியின் இரகசியம் என்ற தலைப்பில் பிரசங்கம் நிகழ்த்திய போது..   புன்னாலைக்கட்டுவன் சிவபூதராயர் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு  சிவபூதராயர் இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் தினம்தோறும் பிரசங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. தினமும் பிரசங்கம் நிறைவடையும் போது 3 வினாக்கள் கேட்கப்பட்டு பரிசு வழங்கப்படும்…. மேலும் மாணவர்களுக்கு சைவநெறி சார்ந்த போட்டிகள் இவ்வார இறுதியில் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்

Read More

விளையாட்டு நிகழ்வு-பரிசளிப்பு நிகழ்ச்சி

சிவபூதராயர் இளைஞர் கழகத்தினர் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு நடாத்திய விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி. .

Read More

பிரித்தானியா வாழ் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் சமூகத்தின் இவ்வருட ஒன்றுகூடல்

This year’s UK Evenai-Punnalaikkadduvan Diaspora Community’s reunion will be held on Saturday 20 October 2018 evening at the St Peter’s Church Hall, Bounces Rd, London N9 8JP.     பிரித்தானியா வாழ் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் சமூகத்தின் இவ்வருட ஒன்றுகூடல் ஐப்பசி மாதம் 20ம் நாள் சனிக்கிழமை (20-10-2018) பிற்பகல் வடக்கு இலண்டனில் நடைபெறும்.

Read More

மரண அறிவித்தல் | பரிமளாதேவி அம்பலவாணர் (தேவி ரீச்சர்)

செல்வி பரிமளாதேவி அம்பலவாணர் (தேவி ரீச்சர்)   ( முன்னாள் ஆங்கில ஆசிரியை வெலிகணை (நீர்கொழும்பு) முத்துவாள் கன்னியர்மடம், செம்மலை மகாவித்தியாலயம், புன்னாலைக்கட்டுவன் தமிழ்கலவன் பாடசாலை, புங்குடுதீவு கணேசவித்தியாலயம்) மலேசியாவைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக் கட்டுவன் தெற்கை வசிப்பி டமாகவும் கொண்ட செல்வி பரிமளாதேவி அம்பலவாணர் நேற்று (18.09.2018) இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற மலேசியன் பென்சனியர் அம்பலவாணர் தெய்வானை ப்பிள்ளை தம்பதியரின் கனிஸ்ர புதல்வியும் காலஞ்சென்ற பரமேஸ்வரி தர்மலிங்கம், மற்றும் பத்மாவதி – நன்னித்தம்பி ஆகி யோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்ற தர்ம லிங்கம், Dr. நன்னித்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும் காலஞ்சென்ற இந்தி ராணி – சத்தியநாதன் மற்றும் லோகராணி – பாலேந்திரன், விஜயராணி – பத்மநாதன், யோகராணி – வன்னியசேகரம் காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் சண்முகதாசன்(ஓய்வு பெற்ற ஹற்றன் நஷனல் வங்கி முகாமையாளர்), தர்மராணி –…

Read More