.
Home | முகப்பு | Contact us | தொடர்புகொள்ள
Tuesday, September 7, 2010

 

 

 
மரண அறிவித்தல் : இரகுநாதன் (நாதன்) திரவியநாதன்
[Thursday, 2009-09-17 18:10:51]
மரண அறிவித்தல் : இரகுநாதன் (நாதன்) திரவியநாதன்
அத்தியடி, நல்லூர்.
உடையார்வளவு, புன்னாலைக்கட்டு வன் தெற்கைப் பிறப்பிடமாகவும், அத்தி யடி, புதுவீதி, நல்லுரை வதிவிடமாகவும் கொண்ட இரகுநாதன் (நாதன்) திரவிய நாதன் 13.09.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார்.
அன்னார் விமலநாயகியின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற இரகுநாதன் தங்கம்மா தம்பதிகளின் மூத்த புத்திரனும், அமரர் சபாரட்ணம் தெய்வநாயகி தம்பதிகளின் மருமகனும், இளமுருகன், நந்தினி, வசந்தி, கருணாகரன், இளையதம்பி, முருகானந்தன், குகானந்தன் ஆகியோரது பாசமிகு சகோதரனும், பானுஜா (சுண்டுக்குளி மகளிர் கல்லூரி), கஜவதனன் (யாழ்.இந்துக் கல்லூரி), பிரணவச்செல்வி (சுண்டுக்குளி மகளிர் கல்லூரி), தாரங்கி (பொஸ்கோ) ஆகிய அன்புச் செல்வங்களின் தந்தையாரும், சிவநேசன், குகநேசன், காலஞ் சென்ற விஜயலட்சுமி மற்றும் பவானி, அனுசா, உமா ஆகியோரது மைத்துனரும், தக்சினி, டௌகிதா, நிதர்சினி, கஜானன் ஆகி யோரது மாமனாரும், கயல்விழி, கயல்அன்பன், வித்யா, நித்தியா, சௌமியா, மதுகரன், சுபகரன், பகிதரன், துவாகரன், மகிஷ்சினி, மதுசனா ஆகியோரது பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 17.09.2009 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அவரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக புன்னாலைக்கட்டுவன் விலங்கன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: மனைவி. 54, புதுவீதி, அத்தியடி, நல்லூர்.

மரண அறிவித்தல்: திரு கதிரேசு கனகசிங்கம்
[Monday, 2010-08-16 19:30:00]
புன்னாலைக்கட்டுவன் வடக்கை பிறப்பிடமாகவும், கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு கனகசிங்கம் அவர்கள் 15.08.2010 ஞாயி்ற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரேசு நன்னிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தம்மாவின் அன்புக் கணவரும், செளதாஞ்சலா, கவிதாஞ்சலா ஆகியோரின் அன்புத் தந்தையும், சோமரவீந்திரன், அம்பிகைகுமார் ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, பரிமளம், பகவதி, செல்லமுத்து மற்றும் கனகசபாபதி(காப்புறுதி நிறுவனம் - கொழும்பு), பூபதி(இளைப்பாறிய ஆசிரியர் - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரஜேன், சஜேன், நிஜேன், அனோஷா, தர்மிஷா, வருண் ஆகியோரின் பேரனுமாவார்..
.
அன்னாரின் பூதவுடல் 16.08.2010 திங்கட்கிழமை அன்று நண்பகல் 1:30 மணிமுதல் 3:00 மணிவரை ஈமக்கிரிகைகளுடன் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..
.
தகவல் .
அம்பிகைகுமார்(அம்பி - மருமகன்) .
செளதா — நோர்வே .
தொலைபேசி: +4741400803 .
கனகசபாபதி — இலங்கை .
தொலைபேசி: +94112580320 .
கவிதா — இந்தியா .
செல்லிடப்பேசி: +919840266575 .
பூபதி — கனடா .
தொலைபேசி: +14163218454 .
சின்னையா (ஆசிரியர்) — கனடா .
செல்லிடப்பேசி: +14163218454

மரண அறிவித்தல் | வேலுப்பிள்ளை செல்லத்துரை
[Monday, 2010-07-26 05:34:20]
புன்னாலைக்கட்டுவன் தெற்கை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்லத்துரை ௦ July 25 இரவு காலமானார். இவர் தேவியின் அன்புக்கணவரும் யோகேஸ்வரி (லதா) (பிரான்ஸ்) சுரேஷ் (கனடா) சந்திராணி (கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும், ராதா கிர்ஷ்ணன், உமனந்தினி, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும் , குறிஞ்சி, நதி, சாம்பவி ஆகியோரின் பாசமிகு பேரனும், தம்புநாதர் (கனடா) காலம் சென்ற அன்னம்மா ஆகியோரின் அன்பு சகோதரனும், ஆவர். இறுதிகிரியைகள் பற்றிய விபரம் : அன்னாரின் பூதவுடல் Monday 02.08.2010 -அன்று Highland Funeral Home 3280 Sheppard Avenue East, Toronto, ON M1T 3K3 5-9PM பார்வைக்கு வைக்கப்பட்டு Tuesday 03/08 Elgin Mills Cemetery And Visitation Centre 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON, L4S1M9 மயானத்தில் தகனம் செய்யப்படும். தொடர்புகளுக்கு சுரேஷ் 416-844-5626

புன்னாலைக்கட்டுவன் அ. த. க. பாடசாலையிலிருந்து தேசிய மட்டத்திற்குத் தெரிவாகிய மாணவி!
[Saturday, 2010-07-17 16:48:54]
யாழ். புன்னாலைக்கட்டுவன் அ. த. க. பாடசாலை மாணவியான செல்வி. கு. தீபாஜினி தட்டெறிதலில் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
மாகாண மட்ட மெய்வல்லுனர்ப் போட்டியில் 15 வயதுக்குட்பட்டோருக்கான தட்டெறிதல் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்..
இப் பாடசாலை வரலாற்றில் தேசியப் போட்டிக்குத் தெரிவான முதல் மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது..

அகாலமரண அறிவித்தல் | மயில்வாகனம் தற்பரநாதன்
[Friday, 2010-07-16 23:40:39]
வயாவிளான் தெற்கை பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தற்பரநாதன் அவர்கள் 16.07.2010 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், சாவித்திரி தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,பரமானந்தியின் அன்புக் கணவரும், சரவணன்(யாழ். பரியோவான் கல்லூரி மாணவன்) அவர்களின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற புவனேஸ்வரி, பத்மநாதன், சத்தியநாதன், மகேஸ்வரி, ஞானேஸ்வரி, நிர்மலேஸ்வரி, ஜெகநாதன், இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, வித்தியெஸ்வரி, காலஞ்சென்ற சுரேந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பரமானந்தன், தமயந்தி காலஞ்சென்ற ஜீவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்..
.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் விலங்கன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்..
.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..
.
தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு குடும்பத்தினர் — இலங்கை தொலைபேசி: +94212240825 செல்லிடப்பேசி: +94772145074

மரண அறிவித்தல் | திரு.விசுவப்பிள்ளை வேலாயுதம்
[Thursday, 2010-07-08 02:44:49]
புன்னாலைக்கட்டுவனை பிறப்பிடமாகவும்,வதிவிடமாகவும் கொண்ட திரு.விசுவப்பிள்ளை வேலாயுதம் 04/07/2010 அன்று காலை காலமானார். இவர் காலம்சென்ற விசுவப்பிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மகனும் நிர்மலாதேவியின் அன்புக் கணவரும் பிரணவநந்தனின் பாசமிகு தந்தையுமாவார். காலஞ்சென்ற விமலாம்பாள் மற்றும் லோகாம்பாள் (இந்தியா), ஜெயக்காந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரரும், கந்தசாமி, கனகநாயகம், அன்னபூரனி, அற்புதநாதன், பராசக்தி, கேதாரகெளரி (கனடா), பாலகிருஸ்னன் (சுவிஸ்), ஜெயகெளரி ஆகியோரின் மைத்துனரும், மீனலோஜனி (கனடா), கஜரூபன் (கனடா), சித்ரா (லண்டன்), கலைவாணி (இந்தியா) ,சியாமளா (சுவிஸ்) உமாகாந்தா (டென்மார்க்) ரமணன் (சுவிஸ்) ஜீவாஜினி, பவித்திரன், பவீனன் ஆகியோரின் மாமனாரும், பவானி (டென்மார்க்) சுகந்தி, வாசுகி, கஜேந்திரா (லண்டன்) சாருகா, பிரியங்கா, வாகீசன் (கனடா), சயீவன் (கனடா) ஆகியோரின் சிறியதந்தையுமாவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 05/07/2010 அன்று நடைபெறவுள்ளது இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அறியத்தருகின்றோம். தொடர்புகளுக்கு: நிர்மலாதேவி இலங்கை : 0094 21 321 8519. ஜெயகாந்தன் லண்டன் : 0044 208 643 2401. 0044 7861 418 487.

பிள்ளையார் கோவிலின் திருவிழா
[Monday, 2010-06-28 03:24:37]
எமது பிள்ளையார் கோவிலின் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது
மேலும் ஆலயத்திற்கு தீர்த்த கேணி ஒன்றும் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது அதன் படமும் இணைக்கப்பட்டுள்ளது. More photos at Punnalaikkadduvan Album.


ஆயாக்கடவை பிள்ளையார் கோவிலின் வருடாந்த திருவிழா DAY 1
[Wednesday, 2010-06-16 19:15:08]











ஆயாக்கடவை பிள்ளையார் கோவிலின் வருடாந்த திருவிழா மகோற்சவ விஞ்ஞாபனம்
[Tuesday, 2010-06-08 03:57:04]








EVANI PUNNALAIKADDUVAN REUNION 03-07-2010
[Friday, 2010-06-04 02:25:49]
More photos at Punnalaikkadduvan Album.


Mark your calendars Punnalaikkadduvan get together Toronto August 14th ..
[Friday, 2010-06-04 02:12:45]
   1 2 3 4 [Next] [Last Page]

 

.